யாளி..!தமிழர் பெருமை..!

யாளி..!

#யாழிஎன்பதுஇசைகருவி#
#யாளிஎன்பதேசரி#
ஆம் மக்களே தொலைத்துவிட்டு #தேடுகிறோம்# #யாளியை#
நம்மில் எத்தனைப் பேருக்கு யாழி(யாளி) என்றால் என்னவென்று தெரியும்?
சிங்க உடலும் அதனுடன் யானையின் துதிக்கையும் தந்தமும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது.
சிங்கத்தின் தலை கொண்டதை “சிம்ம யாழி” என்றும்,
ஆட்டுத்தலை கொண்டதை “மகர யாழி” என்றும்,
யானை முகத்தை “யானை யாழி” என்றும் அழைக்கிறார்கள்.
ஆம் யாளி இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது.
மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்கள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் #டைனோசர்#என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம்,
பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள்.
அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது.
சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள்.
அப்படியானால் இவை போருக்கு பயன்படுதப்பட்டிருக்குமா?

இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால்,
இந்த யாழிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள்.
அதை “யாழி வரிசை” என்றே அழைக்கிறோம். #மும்முடிசோழசக்கரவர்த்திகள்# ஐயன் ஸ்ரீ ஸ்ரீ #இராசஇராச பெருடைய தேவர் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த ன யாழிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது.உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது.
வரலாற்றில் யாளி யை பற்றி குறிப்புகள் இதோ :

இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும் ….
நக்கண்ணையார், அகம். 252 : 1-4

#அதன்பொருள்#
அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கத்தே விழுவதை ஒருபோதும் அறியாத வெற்றியை உடைய வேட்டைக்குச் செல்லும் வாள் போன்ற
வரிகளையுடைய புலியானது நடுங்குமாறு, ஆளியானது பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி, அதன் வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.

மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாழியின் சிலையும், அந்த யாழி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள்.இப்படிப்பட்ட யாழி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை.
குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை.நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும்,
இந்த யாழி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம்.
அது தான் யாளி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் அவலநிலை.
வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன?

யாளி என்கிற விலங்கு இந்தியாவில் கி.மு 25000 ஆம் ஆண்டு காலத்திலேயே வழக்கத்தில் இருந்து பின்னர் கி.பி 800-ல் தான் மீண்டும் கோவில்களில் இடம்பெற்றன.முதலாம் ஆதித்யன் மற்றும் பராந்த சோழனால் கற்றாளி எனப்பட்ட செங்கற்களுக்கு பதிலாக கருங்கற்களை கொண்டு முதன்முதலில் கோவில்கள் கலைநயத்துடன் கட்டப்பட்டன. அதில் தொடங்கி மற்ற கோவில்களில் யாளி முக்கிய இடம் பெற்றது.அது தென்னிந்திய கோவிலின் கலை அம்சமாக விளங்கியது.
சில அறிக்கைகள் இப்படி ஒரு விலங்கினம் இந்திய வனப்பகுதிகளில் வாழ்ந்திருக்கலாம் எனவும், கொடூர இந்த வேட்டை விலங்கை கண்டு மக்கள் அச்சம் கொண்டிருந்தனர் என்றும் கூறியது. காலப்போக்கில் மக்கள் தொகை பெருக்கத்தினால் இவை மெல்ல அழிந்திருக்கலாம் எனவும் கருதியது. ஆனால் இந்த கோட்பாட்டிற்கு எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை .
யாளிகளின் வகைகள்
சிம்ம யாளி
மகர யாளி
கஜ யாளி
ஞமலியாளி
பெரு யாளி
யானை யாளி என யாழிகளின் வகைகள் இருக்கின்றதாம்
யாளியில் மிகவும் பலம் வாய்ந்தது கஜயாளியும்,சிம்மயாளியும்_ தான் இதை கண்டால் அனைத்துவிலங்குகளும் நடுங்குமாம்.
பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. தென் இந்தியாவில் காணப்படும் கோவில் கோபுரங்கள் முதல், மண்டபத்தின் தூண்கள் வரை, ஆயிரக்கணக்கில் ஒரு பிரமாண்ட விலங்கின் உருவத்தை சிலைகளாக பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.
யாளியை அடக்குபவன் மாவீரனாக இருக்கவேண்டும். அவன் சில மூலிகைகளின் பலம் கொண்டு, யாளியை அடக்கும் ஆற்றல் பெற்றவன் #கஜகேசரி# ஆவன்(வீரன் என்பவன் தனி ஆட்களை சமாளிப்பவன், மாவீரன் என்பவன் நூறு வீரர்களை ஒரே போரில் சமாளிக்கும் திறன் கொண்டவன்) சோழர்களில் சிலருக்கு #கஜகேசரி# பட்டம் உண்டு அறிக, யாளி யை அடக்க உதவும் மூலிகைகள் என்னென்ன என சித்தர்கள் பாடல்களில் தெளிவாக உள்ளது.சில மூலிகைகளை உண்டால் யாளியின் பலம் கிடைக்கும் என கொடுத்து இருப்பார்கள். அதை வைத்து யாளியை அடக்கி அதற்க்கு கடிவாளம் போடுவார்கள் பின் அதை தன் கட்டுபாட்டில் வைத்திருப்பார்கள்.

#யாளி# குறித்த மருத்துவ சித்தபாடல்கள் கீழே

நன் முருங்கைத்தழை, நெய்வார்த்துண்ணில்
“யாளி” யென விஞ்சுவார் போகத்தில்(போர்களத்தில்)
#அகத்தியர்#

நிரச்சொன்னர் மெய்யாம் தகரையை ஒத்த
யாளி(ஆழி),அன்னர்(அன்னம்),புலத்து கையான் தகரை
ஒத்துகால்
#தேரையர்#
எப்படி எங்கனம் இந்த விலங்குகள் பற்றி இவ்வளவு கல்வெட்டுகள் இருந்து உலக சமுதாயம் ஏற்க மறுக்க காரணம் என்ன?. ஆம் எப்படி நம் மக்கள் அறிவாளிகள் ஆம் நம்மை நம் பாரம்பரியத்தின் அகப்பொருளை சந்தேககிப்பது இப்பொழுது எல்லாம் நகைப்பிற்குறியவையே.. ஏன் இது போன்ற நம் பாரம்பரியத்தின் சுவடான யாளிகள் இன்றும் உயிரோடு வாழ்ந்தால் எப்படி இருக்கும் ஆனால் ஏங்கே இருக்கும் யாளி காடுகளில் அதுவும் அடர்ந்த காடுகளில் அதுவும் மனித வாடையே இல்லாத காடுகளில் ஆஹா அப்படி ஒரு காட்டு பகுதி தென்னிந்தியாவில் இல்லவே இல்லை..
இன்னமும் Harry potter, Lord of the Rings, கேம் ஆப் த்ரோன்ஸ்(Game of thrones), போன்ற படைப்புகளை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்து பிரமிப்படைகிறோம் இதுவே மேற்கத்திய நாட்டில் #யாளி# படைக்கப்பட்டிருந்தால் அவை இறக்கைகள் கட்டிவிடப்பட்டு கொண்டாடப்பட்டிருக்கும், யாளிகளே இந்தியாவின் (சைனாகார டிராகன்கள்) வேற வழி என்ன செய்ய இப்படி பட்ட கேவலமான உதாரணங்களை காண்பிக்க வேண்டியுள்ளது நாம் தினசரி கண்டு கொள்ளாமல் கடந்து செல்லும் அவை நம்மால் பிரம்மிப்பாய் கண்டு களித்து போற்றப்பட வேண்டியவை.

#குடிக்கு# அடிமையாகிக் கிடக்கும் #தமிழ்# சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்?
பதவிக்கு அடித்துக்கொள்ளும் தமிழக அரசியலில் இவற்றின் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா அல்லது கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இவை மண்ணோடு மண்ணாகிவிடுமா?
எதற்குமே பதில் உண்டா?
இங்கனம் ஆராய்ச்சி செய்ய வேண்டி மரபுகள் விட்டு விட்டு எம் மக்கள் தேவைஇல்லாத பல விஷயங்களில் மாக்களாகி அலைகிறார்களே என்று மனம் வெதும்புகிறது.

என்றும்
பேரன்புடன் முனைவர் அர .க. #விக்ரமகர்ணபழுவேட்டரையர்#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *