தமிழ்புத்தாண்டு

[6:26 PM, 4/23/2019] Bubble Builder Engineer: தமிழா சிந்தித்து பார் .. !!

உன் கூற்று படி “சித்திரை” தமிழ்ப் புத்தாண்டு என்றே வைத்துக்கொள்வோம்.

ஏன் 60 புத்தாண்டுகளின் பெயரும் தமிழில் இல்லை? சமஸ்கிருத மொழியில் தானே 60 ஆண்டுகளின் பெயரும் இருக்கின்றது. பின்பு எப்படித் தமிழ் புத்தாண்டாகும்? தமிழ் புத்தாண்டு என்றால் அப்பெயர்கள் தமிழில் தானே இருக்கும்.

1.பிரபவ
2.விபவ
3.சுக்கில
4.ப்ரமோதூத
5 ப்ரஜோத்பத்தி
6.ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8.பவ
9.யுவ
10.தாது
11.ஈசுவர
12.வெகுதான்ய
13.ப்ரமாதி
14.விக்கிரம
15.விஷு
16.சித்ரபானு
17.சுபானு
18.தாரண
19.பார்த்திப
20.விய
21.ஸர்வஜித்
22.ஸர்வதாரி
23.விரோதி
24.விக்ருதி
25.கர
26.நந்தன
27.விஜய
28.ஜய
29.மன்மத
30.துர்முகி
31.ஹேவிளம்பி
32.விளம்பி
33.விகாரி
34.சார்வரி
35.ப்லவ
36.சுபகிருது
37.சோபகிருது
38.குரோதி
39.விசுவாவசு
40.பராபவ
41.ப்லவங்க
42.கீலக
43.சௌமிய
44.சாதாரண
45.விரோதிகிருது
46.பரிதாபி
47.ப்ரமாதீ
48.ஆனந்த
49.ராக்ஷஸ
50.நள
51.பிங்கள
52.களயுக்தி
53.சித்தார்த்தி
54.ரௌத்ரி
55.துன்மதி
56.துந்துபி
57.ருத்ரோத்காரி
58.ரக்தாக்ஷி
59.குரோதன
60.அக்ஷய
இதில் எங்கே உள்ளது தமிழ்
தமிழே இல்லாத போது
தமிழ் புத்தாண்டு எங்கனம்?????

#தமிழர்திருநாளாம்#
#சித்திரைதிருநாள்வாழ்த்துகள்#
[6:27 PM, 4/23/2019] Bubble Builder Engineer: #தைதிங்கள்முதல்நாளேதமிழ்புத்தாண்டு# #சித்திரைதிருநாள்வாழ்த்துகள்

தமிழ்புத்தாண்டு சித்திரையா? தைதிங்கள் முதல் நாளா?

தெறிந்துகொள்வோம்… இலக்கிய உன்மைகளை

அறிஞர்களும் சான்றோர்களும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருந்தாலும் ஒரு சாரார் இதை மறுத்து வழக்கமான சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகப் பாவித்து வருகிறார்கள். இவர்கள் தமிழ் ஆண்டுகள் என்கிற பெயரில் வழங்கி வரும் வடமொழிப் பெயர்களையும் ஏற்றுக் கொண்டு வருவது வருத்தத்தைத் தருகிறது. தமிழருக்கென ஒரு தொடராண்டு கொண்டுவருவதில் ஒருவருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் தமிழ் முதல் திங்கள் ’தை’யா அல்லது’சித்திரை’யா என்பதுதான் குழப்பம். தமிழ்ப் பேசும் அனைத்து தரப்பினருக்கும் வடமொழிப் பெயரை மாற்றுவதிலும் மாற்றுக் கருத்தேதுமிருக்க வாய்ப்பில்லை.

காலத்தின் அருமை

நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம், மற்றவை மானம், உயிர்.

’நாளென ஒன்று போல் காட்டி உயிரீரும்

வாளது உணர்வார்ப் பெறின்’ – திருக்குறள்

என்கிற குறள் மூலமும், காலம் அறிதல் என்கிற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையை வள்ளுவம் உணர்த்துகிறது.

தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெரும் புத்தி படைத்த‘கணி’கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.‘அறிவர்’கள் குறித்துத் தொல்காப்பியரும்குறிப்பிடுகின்றார்.

தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள்.

ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி, தனது பண்பாடு, தனது நாகரீகம் போன்றவற்றை பேணிக்கொள்ளுதல் அவசியமாகின்றது. இந்த காப்பாற்றும் தன்மையே அந்த இனத்தின் தொடக்கத்தையும் வாழ்வாதாரத்தின் முதன்மையையும் அறிமுகம் செய்து வைக்கும் காரணியாகின்றது

அந்தவகையில் உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதல்நிலைபெறும் தமிழ் மொழி, தமிழர் இனம், தமிழர் நாகரீகம் என்பவற்றின் தாயகம் குமரிக்கண்டம் என்றே தொல்பொருள் வல்லுனர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர். தமிழ் வளர்த்த மூன்று சங்கங்களின் சுவடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் படி கடற்கோளால் காவுகொள்ளப்பட்ட குமரிக்கோட்டின் நடுவரைக்கோடு இலங்கை என்கின்ற தேசத்தை நடுவணாகக் கொண்டு தமிழர்களின் பூர்வீகத் தாயகம் உலகப் பந்தில் ஓரு தேசமாக தன்னை நிலை நிறுத்தியிருந்தது .

குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர் இனம் தன் தாய் மொழியாக தமிழையும் தமது நாகரீகத்தையும் தன் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை தமது நாகரீகத்தின் அடையாளமாக காலக்கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்-கோண்டிரடோஸ், எஸ்.ஜி.வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர். சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்- கோண்டிரடோஸ் எஸ்.ஜி வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.

இந்த மெய்யியலாளர்களின் கருத்துப்படி ஆதிக்குடியான மூத்த தமிழ் குடி மொழி வழியேகி வாய்வியல் கூறுகளுக்கும் ஆண்டுக்கணிப்பீடுகளை தொடக்ககமாகவும் நிர்ணயம் செய்து கொண்டனர் என கூறும் இவர்கள் தமிழர்கள் என்னும் இந்த சாதியினர் பூமியின் சுழற்சிக்கு ஏற்ப காலக்கணிப்பீடுகளை மதிப்பீடு செய்து அதனூடாக கண்டறிந்த பெறுபேறுகளுக்கு அமைவாக தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பகுத்தார்கள்.

காலத்தைக் கணக்கிடுவதில் இத்துணைக் கவனம் செலுத்திய தமிழர்கள் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளைப் பொதுவான ஆண்டுக்கணக்கால் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது வியப்பாக இருக்கிறது,வருத்தம் தருகிறது.

ஒரு நாளை கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பிரித்து வைத்தார்கள்.

‘வைகறை,

காலை,

நண்பகல்,

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்

பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;

பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு, தைம் முதல்நாள், பொங்கல் நன்னாள்

-பாவேந்தர் பாரதிதாசன்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. புத்தாண்டில் உலகம் வாழ் தமிழர்களின் வாழ்வில் தென்றல் வீசட்டும். இன்பம் சேரட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும்.

இது இப்படி இருக்க இதோ இன்னும் தொல்காப்பிய உதாரணங்கள் பலபல அவை அனைத்தும் படியுங்கள்….

சரிப்பா, பிரபவ – விபவ-ன்னு 60 ஆண்டுப் பெயர்கள் வேணாம்; ஆனா “சித்திரை” தானே புத்தாண்டுப் பிறப்பு?
அதை எதுக்கு தை மாசத்தில் மாத்தி வைக்கணும்? -ன்னு சிலர் “வேறு ரூபத்தில்” கேட்கத் தலைப்பட்டு இருக்கிறார்கள்!

இவர்களின் வாதம் = சோதிட அடிப்படையில் அமைந்துள்ளது;
மேஷம் ஆம் அதுதான் முதல் ராசி
சூரியன், மேஷ ராசிக் கட்டத்தில் புகுவது = சித்திரை!
எனவே அது தான் புத்தாண்டு-ன்னு இவர்கள் வாதம்!

சித்திரை = மேஷம் புகும் மாதம் தான்!
ஆனால் மேஷம் புகுந்தாத் தான் = “ஆண்டின் துவக்கம்” என்பதற்கு என்ன ஆதாரம்? ன்னு கேட்டா….பதில் இல்லை!

ஒரு இனத்தின்/ பண்பாட்டின் ஆண்டுப் பிறப்பு
= ஜோதிட அடிப்படையில் தான் இருக்கணுமா?

பொதுவா, சித்திரை = வசந்த காலம் (இளவேனில்)!
“வசந்தத்தில்” துவங்குதல் தானே ’மரபு’?-ன்னு இவங்களாச் சொல்ல ஆரம்பிச்சிருவாங்க! ஆனா தரவு? ஆதாரம்??

சரி, சம்ஸ்கிருதம்/ ஜோஸ்யம் = இதெல்லாம் வேணாம்!
நாம, அடிப்படையிலேயே கையை வைப்போம், வாங்க!
“புத்தாண்டு நாள்” ங்கிற ஒன்னு..
தமிழ் இலக்கியத்தில் இருக்குதா?-ன்னு பார்ப்போமா?

1. தொல்காப்பியம்:

தொல்காப்பியம் – அதானே முதல் நூல் – அங்கிருந்தே துவங்குவோம்!
** புத்தாண்டு = தொல்காப்பியத்தில் இல்லை!
ஆனால், எதை முதல் பருவமாகத் தொல்காப்பியம் சொல்கிறது?

மாயோன் மேய காடு உறை உலகமும்,
சேயோன் மேய மை வரை உலகமும்,
….
காரும் மாலையும் = முல்லை
குறிஞ்சி = கூதிர், யாமம் என்மனார் புலவர்!

கார் காலம் (மழைக் காலம்) தான், திணைகளுள் முதல் காலமாகக் குறிக்கிறது தொல்காப்பியம்!
* முதல் திணை = முல்லை!
* முதற் காலம் = மழைக் காலம்!

பண்டைத் தமிழகத்தில் “மழை வருதலே”
= முதன்மையாக/ மங்களகரமாகக் கருதப்பட்டதோ என்னவோ?

இது திணை வரிசை மட்டுமே!
ஆனா, இதான் புத்தாண்டு நாள்-ன்னு வெளிப்படையாக் குறிக்கலை!

ஆனா, இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர்… கார்காலமே ஆண்டின் துவக்கம்-ன்னு வெளிப்படையாக் காட்டிச் செல்வார்!

(நச்சினார்க்கினியர் உரை:
ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை (ஆவணி) முதலாக,
தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை (ஆடி) ஈறாக..
வந்து முடியுந் துணை ஓர் ஆண்டாம்)

இந்த உரையே எனக்குச் சாதகமா எடுத்துக்கலாம்; ஆனா எடுத்துக்க மாட்டேன்;
ஏன்-ன்னா…
இது தொல்காப்பியரின் கூற்று அல்ல; உரையாசிரியரின் கூற்று மட்டுமே;

உரையாசிரியர்கள் காலம் 10ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே;
பல உரைகளில், அக்காலச் சமய/ சாதி அரசியலும் கலந்து இருக்கும்; நமக்கு மூலப் பாடலே முக்கியம்;

2. சங்க காலம் – எட்டுத் தொகை/ பத்துப் பாட்டுக்கு வருவோம்!

பல பாடல்கள், “தைஇத் திங்கள்” பற்றிப் பேசுகின்றன!
அதையே பல தமிழ் அன்பர்களும், “தைஇத் திங்கள், தைஇத் திங்கள்” -ன்னு இணையத்தில் ரொம்ப எழுதுறாங்க;

ஆனா அதான் “ஆண்டின் துவக்கம்” -ன்னு சங்கத் தமிழ் சொல்லுதா? இல்லை

நற்றிணை =தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோள் குறுமகள்

குறுந்தொகை = தைஇத் திங்கள் தண்ணிய தரினும்

புறநானூறு = தைஇத் திங்கள் தண்கயம் போல்
கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்

ஐங்குறுநூறு = நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் திங்கள் தண்கயம் போல

கலித்தொகை = தையில் நீராடித் தவம் தலைப்படுவாயோ?

ஒரு மாசத்தோட பேரு, இம்புட்டு அதிகமா இலக்கியங்களில் வருவது
= தை மாதம் மட்டுமே!
ஆனா, தை = “ஆண்டின் துவக்கம்” -ன்னு எங்கும் நேரடியாச் சொல்லலை!

தையொரு திங்களும் தரை விளக்கி
ஐயநுண் மணற் கொண்டு தெருவணிந்து
-ன்னு, அதே சங்கத் தமிழ் மரபில், பின்னாளில் வந்த ஆண்டாளும் பாடுகிறாள்!

தையொரு திங்கள் = சிறப்பான விழா! தமிழில் சிறப்பான மாசம்! அவ்வளவே!

3. அடுத்து… ஜெ-வுக்கு அறிக்கை எழுதிக் குடுக்கும் “அறிஞர்” முதற்கொண்டு வேறு சிலரும் காட்டுவது:
“ஆடு தலை” = நக்கீரர் எழுதியநெடுநல்வாடை!

ஆடு தலை = ஏதோ ஆட்டுக் கறி/ தட்டி உறிஞ்சும் மூளைப் பகுதி-ன்னு நினைச்சிக்காதீக
தலை = தலையாய/ முதன்மையான

திண் நிலை மருப்பின் “ஆடு தலை” யாக
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து

ஆடு தலை = மேஷம் தான் முதல்;
நக்கீரரே சொல்லிப்புட்டாரு! எல்லாரும் ஜோராக் கைத்தட்டுங்க!

மேஷம் தான் முதல்-ன்னு சொல்றாரு! ஆனா எதுக்கு “முதல்”?
* ஆண்டுக்கு முதல்??? = இல்லை!
* ராசி மண்டலத்துக்கு முதல்! = “வீங்கு செலல் மண்டிலத்து”

அடங்கொப்புரானே! இது எனக்கே தெரியுமே! எல்லாப் பத்திரிகை/ ராசி பலன்-லயும் ஆடு தானே மொதல்ல போடுவாய்ங்க!!
இதைப் போயி, நக்கீரர் சொன்னதா ஏத்தி வுட்டு…

பாட்டு குடுத்தாலே ஆதாரம் ஆகாதுங்க மொதல்ல, பாட்டின் பொருள் பொருந்துதா? -ன்னு பாத்துட்டு, பொய் சொல்லுங்க
பாவம் நக்கீரர்! திருவிளையாடற் புருடாணம் போல், ஒரு மானமிகு சங்கப் புலவன் மேல் எத்தினி தான் ஏத்தி வுடறது?

சித்திரை = இதர “ஆதார”ங்களாக ஜோடிக்கப்படுபவை:

1) சிலப்பதிகாரம் – இந்திர விழா
இது இளவேனில் காலத்தில் நடந்தது; உண்மை தான்; சிலப்பதிகாரமே சொல்லுது!

நடுக்கு இன்றி நிலைஇய நாளங்காடியில்
சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென,

ஆனா, சித்திரையில், காமவேள் விழா/ காதல் விழா -ன்னு தான் சொல்லுதே தவிர….
“புத்தாண்டு”-ன்னு சொல்லலையே! ஆண்டின் முதல் மாசம்-ன்னும் சொல்லலையே!

ஏதோ, சித்திரை-ன்னு வரும் ரெண்டு வரியைச் சொல்லிட்டா, அப்பாவிப் பொதுமக்கள் பயந்துருவாங்களா?
சிலம்பின் வரிகள் ஒன்னும் சாதரண வரிகள் அல்லவே ஆக தைதிங்கள் முதல் நாளே தமிழர் தம் புத்தாண்டாம் என கூறுகிறேன்…

வாழ்க தமிழ் வாழிய தமிழினம் அவர்தம் புத்தாண்டு தைதிங்கள் முதல் நாளே…..

என்றும் அன்புடன் அர.க.#விக்ரமகர்ணபழுவேட்டரையர்#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *