உணவே மறுந்து
உணவே வாழ்வு
எல்லா உயிர்களும் போதும் என்று சொல்ல கூடிய ஒரே விசயம்
#உணவு#
உணவு முறை ஆம் தமிழர் பாரம்பரியத்தின் வேர் உணவே அதை பற்றி ஆராய்வோம் வாருங்கள்:
இன்றில் இருந்து,2.5மில்லியன்ஆண்டுகளுக்கும் 10,000ஆண்டுகளுக்கும்இடைப்பட்ட பழையகற்காலத்தில் அதாவதுவிவசாயத்திற்கும்கைத்தொழிலிற்கும்முற்பட்ட காலத்தில்,மனிதஇனம் பொதுவாகவேட்டையாடுபவராகவும்,உணவுசேகரிப்போராகவும்,ஒருநாடோடி வாழ்க்கைமுறையைமேற்கொண்டனர்.கனிகள்,காய்கள்,கிழங்குகள்மற்றும் விலங்குகளின்இறைச்சிகள் இவர்களதுமுக்கிய உணவுப்பொருள்களாகும்.பாலூட்டிகளை சோர்வடையும் வரைதுரத்தினார்கள்.பெரியசூறையாடும்(மற்றப்பிராணிகளைத் தின்கிற)விலங்குகள் விட்டுச் சென்றபிராணிகளின் இறைச்சி,கொழுப்பு,உறுப்பு போன்றஅழுகு ஊன்களைஉண்டார்கள்.என்றாலும்ஒருவாறுஇறுதியில்,அவர்கள் மீனைதூண்டில் போட்டுபிடிக்கவும்ஈட்டி,வலை,அம்பு,வில்லுபோன்றவை கொண்டுவேட்டையாடவும்கற்றுக்கொண்டனர்.மனிதனின் பரிணாமவளர்ச்சியில் உணவு முக்கிய இடத்தைபெறுகிறது.இது பலமாற்றங்கள் பெற்று,எமதுமுன்னோரில் இருந்துவழிவழியாக எமக்குவந்துள்ளது.இன்றுநாம்,சிறந்த உணவைஎமக்கு தேர்ந்துஎடுப்பதற்கு,எப்படி நாம்பரிணாம வளர்ச்சிபெற்றோம் என்பதைவிளங்கிக் கொள்வதுகட்டாயம் உதவிபுரியும்.இன்று ஒவ்வொருஉயிர் இனமும் பொதுவாகசாப்பிடும் உணவு-அதுபழமாகவோ,காய்கறியாகவோ அல்லதுவிலங்காகவோ,அது எப்படிஇருப்பினும்-அவை,அவைகளின் பழையகற்கால முன்னோர்களின்உணவு பழக்கத்தில் இருந்துமுற்றிலும்வேறுபட்டது.பெரும்பாலானசந்தர்ப்பங்களில்,நாம்சாப்பிடும் தாவர,விலங்குவகைகள் செயற்கைத்தேர்வு மூலம்மாற்றப்பட்டது.இன்று,முடிந்த அளவுக்கு இறைச்சி,பால்,முட்டை முதலியவற்றைகூடுதலாகபெறக்கூடியதாக நாம்மாடு,கோழி,ஆடுபோன்றவற்றை தேர்ந்துஎடுத்து வளர்ப்பதுடன்பெரியபழங்கள்,கொழுப்பானகொட்டைகள் இருக்கும்பருப்பு,இனிமையானசதையையும் குறைந்தஇயற்கையானநச்சுகளையும் கொண்டபழங்கள் அல்லதுகாய்கறிகள் போன்றவிரும்பத்தகுந்ததன்மைகளைக் கொண்டவிதைகளை தேர்ந்துஎடுத்தும் நாம்விதைக்கிறோம்.
பொதுவாக ஒரு நாளில்மூன்று முறை உணவுஉட்கொள்ளுதல் இயல்பானஒன்று என்ற எண்ணம்எம்மிடம் இன்று உள்ளது.ஆனால் அப்படி என்றும்இருக்கவில்லை.இதுஇன்றைய பண்பாட்டில்ஏற்பட்ட ஒரு நடை முறையேஆகும். உலகத்தில் உள்ளஎல்லா மக்களும்-மேற்குநாடு உட்பட-அனைவரும்என்றும் மூன்று முறைஉணவு உட்கொள்ளவில்லை. ஆம் தமிழர்களின் உணவுமுறைகள்அலாதியானது,அவசியமானது தமிழ்நாட்டில் திணை, வரகு, குதிரைவாலி, சாமை போன்ற உணவுகளை பழக்கப்படுத்தும் ஒரு முயற்சியில் இறங்கியிருக்கிறோம். அரிசியை கூடிய மட்டும் தவிர்த்து விட்டு எங்கனம் நாம் மற்ற உணவு வகைகளை ஏற்பது
ஆக மிக முக்கியம் சிறு தானிய உணவுகளையும், பச்சைப் பயிர்கள் , உளுந்து, எள்ளு, கடுகு இவற்றை எவ்வாறு மருந்தாக மாற்றுவது என்பதையெல்லாம் நாங்கள் கொண்டு செல்கிறோம். அன்றைய தமிழர்கள் வாழ்க்கையிலே கடுகோதன்னம் என்ற சாப்பாட்டு முறையே இருந்தது. கடுகோதன்னம் என்றால் கடுகை பிரதானப்படுத்தி அரிசியுடன் சேர்த்து சமைக்கக்கூடிய ஒரு முறை. உளுந்தோதன்னம் என்பது உளுந்தையும், அரிசியையும் வைத்துச் சமைக்கக்கூடிய ஒரு முறை, எள்ளோதன்னம் என்றால் எள்ளையும், அரிசியையும் வைத்து சமைக்கக்கூடிய ஒரு முறை. ஆக இந்த முறையெல்லாம் முன்பு வாழ்ந்த தமிழர்களிடம் இருந்தது.எள்ளுச்சோறு, கொள்ளுச்சோறு, கடுகுச்சோறு இவையெல்லாம் இருந்த தமிழ் சமூகத்தில் ஹார்மோனல் பிரச்சனை இன்று உலகளாவிய அளவில் பேசப்படுகிற தைராய்டு பிரச்சனை எல்லாவற்றுக்குமே சோறே மருந்தாக மாறியது. ஏன் அப்படி ஒரு காலகட்டத்தை நாம் உருவாக்கக் கூடாது. இதை தமிழ் சமூகம் சிந்திக்க வேண்டும். இந்த மாதிரியான எள்ளுச்சோறு, கொள்ளுச்சோறு, இதெல்லாம் சாப்பிட்டால் அதன் அடிப்படையில் நாளமில்லாச் சுரப்பிகள் ஒழுங்காகத் தோன்றி ஒவ்வொரு தமிழனும் சிறப்பான வாழ்க்கையை மேற்கொண்டு வந்தார்கள். அப்படி இருந்த தமிழர்கள் இன்று உணவுகளால், பன்னாட்டு கம்பெனிகளால் மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் நம்முடைய புராதன உணவு முறைகளை, பாரம்பரிய உணவு முறைகளை நாம் ஒவ்வொருவரும் நினைத்து, மறுபடியும் மீட்டெடுக்க வேண்டிம். ஆக மறைந்துவிட்ட உணவுப் பொருள்களை அடையாளப்படுத்தவேண்டிய ஒரு மிகப் பெரிய பொறுப்பு உணவியல் ஆராய்ச்சி யில் ஈடுபட்டிருக்கிற என் போன்ற பலரிடம் திணிக்கப்பட்டுள்ளது. நாங்களே தமிழர்கள் பயன்படுத்திய மூவாயிரம் வகையான உணவுப்பொருள்களை கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் எதுவானாலும் அரிசி ஆம் தென்னிந்திய மக்கள் அதிகம் பயன்படுத்திய உணவு தானியம் அரிசியே
அரிசியே முதன்மை உணவு
“நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!”
ஐங்குறுநூறு
இன்று நாம் பயன்படுத்தும் “வெள்ளை அரிசியை” சங்க காலத்து மக்கள் பயன்படுத்தவே
இல்லையாம். இந்த வெள்ளை அரிசியில் உமி, தவிடு ஆகியவற்றை முற்றிலுமாக நீக்கி விடுகின்றனர். ஆனால் சங்க காலத்தில் இவற்றையெல்லாம் நீக்கப்படாத “சிவப்பு அரிசியே” பயன்படுத்தினர். இதனை “முழு அரிசி” எனவும் “தீட்டப்படாத அரிசி” எனவும் கூறுவார்கள். அவர்களின் உணவில் அரிசியும் முக்கிய உணவாக இருந்தது.
அருந்தானிய உணவுகள்
இன்று நாம் வழக்கு மொழியாக பயன்படுத்துகின்ற “சிறுதானியம்”தான் அன்று “அருந்தானியம்” என்று வழங்கப்பட்டது. மக்களின் அன்றாட உணவு பழக்கத்தில் சிறுதானிய உணவே அதிகம் பயன்படுத்தப்பட்டது. கம்பு, வரகு, திணை, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம் ஆகியவையே முதன்மை உணவு பட்டியலாக இருந்ததாம். போருக்கு செல்லும் வீரர்களும் இந்த சிறுதானிய உணவுகளையே உண்பார்களாம். பல அயல்நாட்டு போர் வீரர்களை தோற்கடிக்க நம் பாரம்பரிய உணவு பழக்கமும் முக்கிய பங்காக இருந்ததென்று சங்க காலத்து நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்திணை உணவுகள்,
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவையே ஐந்திணைகள். இதில் வாழ்ந்த மக்கள் அந்த இடத்தின் தன்மைக்கேற்ப உணவு முறைகளை பின்பற்றி வந்தனர். குறிஞ்சியில் உள்ள மக்கள் தேன், திணை போன்ற உணவுகளை உண்டனர். முல்லை மக்கள் இறைச்சி, பச்சை காய்கறிகள் போன்றவற்றையே உணவாக பயன்படுத்தினர். மருத நில மக்கள் அரிசி, கேழ்வரகு, திணை, கம்பு, சோளம் போன்றவற்றை உண்டு களித்தனர். நெய்தலில் உள்ள மக்கள் அதிக கடல் உணவுகளையே சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்தனர், பாலை நிலத்தினர் இறைச்சி, மீன், போன்றவற்றையே பிரதான உணவாக உண்டார்கள்.
ஆனால் இன்று?
பல போரின் வெற்றிக்கே அவர்களின் உணவு எத்தகைய முக்கிய இடத்தில் இருந்தது என்பது மிகவும் வியக்கத்தக்க ஒன்றே. ஆனால் இன்றோ நம் உணவின் தன்மையும், உணவு முறையின் சாரமும் முற்றிலும் திரிந்து எண்ணற்ற சீர்கேடுகளை உடலுக்கு தருகிறது. இத்தகைய பழம்பெரும் வரலாற்றை கொண்ட நம் தமிழரின் உணவு முறையை இன்று நாம் பின்பற்ற தவறியதாலே சிறுவயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகி உயிரையே இழந்து விடுகின்றோம். இனியாவது உணவுகளை இயற்கை தன்மையோடு உற்பத்தி செய்து, உடல் நலத்தை காப்போம்.
என்றும்
பேரன்புடன்
முனைவர் அர. க. #விக்ரமகர்ணபழுவேட்டரையர்