பேரன்பு கொண்ட மக்களே தென்னிந்திய சமூகம் தொலைத்துவிட்டு நிற்கிறது அதன் அசல் விழாக்களை
ஆம் வாருங்கள் காண்போம்
சங்க இலக்கியங்களைப் பார்க்கும் போது நாள் பொழுது நேரம் என்பனவற்றை சூரியனின் நகர்வை தமிழர்கள் அறிவியல் ரீதியாக பல்வேறு நிழல் வடிவங்களை பயன்படுத்தி அளந்து கணித்து வைத்துள்ளனர். அவர்கள் ஒரு பொழுதை நாள் சிறு பொழுது, பெரும்பொழுது எனப் பிரித்தனர். சிறு பொழுது ஆறு பகுதிகளைக் கொண்டது. பெரும் பொழுது என்பது ஆறு பருவங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு பெரும் பொழுதும் இவ்விரு மாதங்களை கொண்டமைந்துள்ளது.
இளவேனிற்காலம் – சித்திரை வைகாசி
முது வேனிற் காலம் – ஆனி ஆடி
கார்காலம் – ஆவணி, புரட்டாதி
குளிர்காலம் – ஐப்பசி, கார்த்திகை
முன்பனிக்காலம் – மார்கழி, தை
பின்பனிக் காலம் – மாசி பங்குனி
இதில் சித்திரை வைகாசி மாதங்களே மிகுந்த சிறப்பை உடையது.
அறிவியலிலும் வான் அறிவியலில் கோலோச்சிய தமிழர்கள் ஓர் ஆண்டை வலசை , இடசை என இரு சுற்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். இதில் சூரியன் மேட ராசியிலிருந்து மீன ராசிவரையான பன்னிரெண்டு இராசிகளிலும் சஞ்சரிக்கும் காலங்களை சூரிய மாதங்களாக கணக்கிட்டு 12 மாதங்களை ஒரு ஆண்டு என கணித்துள்ளனர்.
இதில் பெளர்ணமி(முழுநிலவு) பங்கு சிறப்பு வாய்ந்தது
#கோவலன்சித்திரா பெளர்ணமி#
தமிழர்களில் சித்திரா பெளர்ணமி கொண்டாடிய கோவலன் கண்ணகி குறித்து அறிவோம்.
இன்றைக்கு சுமார் 1800 வருடங்களுக்கு முந்தைய கண்ணகி பகுத்தறிவுவாதியல்ல. அம்மி மிதித்து , அருந்ததி பார்த்து, மாமுது பார்ப்பான் மறையோதிட தீ வலம் வந்து திருமணம் செய்து கொண்டவள் தான்.. பிறகு நடந்த கதை யாவரும் அறிந்ததே.
கண்ணகி கோவலன் திருமணத்திலிருந்து தொடங்குகிறது. கண்ணகி கோவலன் திருமணத்தில் தாலி உண்டா என்ற கேள்விக்கு இரு வேறு பதில்கள் உள்ளன .திருமண ஊர்வலத்தில் மங்கல அணியும் வருகிறது. ஆயின் அதை கோவலன் அவளுக்கு அணிவித்ததாக எந்த குறிப்பும் இல்லை. கணவனைப் பிரிந்திருந்த காலத்தில் மங்கல அணியைத் தவிர வேறு எதுவும் அணியவில்லை எனவும் குறித்திருக்கிறார். அந்த மங்கல அணி என்பதுதான் இன்றைய தாலியா என்பது சிறிது குழப்பமாகத்தான் இருக்கிறது.
அந்நாளைய தமிழகத்தின் பூகோள அமைப்பு, எல்லைகள், சமயங்கள், சாதிகள் , சடங்குகள், தெய்வங்கள், தொழிற்பிரிவுகள், அழகுக் குறிப்புகள் , நீர்வளம், போன்ற பல தகவல்கள் சிலப்பதிகாரத்தில் கொட்டி கிடக்கின்றன.
#சித்திராபெளர்ணமி# நாளன்று தான் இந்திரவிழாவில் கண்ணகியுடன், மதுரையை நோக்கி நடக்கிறான் கோவலன் சமணத் துறவியான கவுந்தியடிகளின் துணையுடன். பல நாட்கள் தொடரும் இந்தப் பயணத்தில், அவர்கள் கண்ட காட்சிகள், கோவில்கள், சந்தித்த பல்வேறு தரப்பட்ட மனிதர்கள் என யாவும் அழகுத் தமிழில் சிலப்பதிகாரத்தில்வ பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆடித்திங்களில் பேரிருளையுடைய (அமாவாசை போலும்} கிருத்திகை சேர்ந்த வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் மதுரை கண்ணகியால் தீக்கிரையாக்கப்பட்டது. சித்திரா பெளர்ணமியிலிருந்து , ஆடி அமாவாசை வரையிலும் அதற்கு 14 நாட்களுக்குப் பின் வந்த ஆவணி பெளர்ணமி வரையிலுமாக சுமார் 3 மாதங்கள் அடங்கியுள்ளன.
தேனி மாவட்ட எல்லையில் இருக்கும், கண்ணகி கோட்டத்தில் , மே-10 ஆம் தேதியான இன்று சித்ரா பெளர்ணமி எனும் முழுநிலவு விழா நடைபெறுகிறது.அதே போல மொழி ஒரு இனத்தின் அடையாளம். ஒரு தனித்தப் பண்பாட்டின் அடையாளம். இனமானத்தின் அடையாளம். தமிழ்,தமிழருக்கு மொழி மானமாக அமைந்தது. அவ்வகையில் பெரும் தொன்மை வாய்ந்த பண்பாட்டுக்குரிய தமிழ் மக்கள், தங்களின் மொழியை உழைப்பு மொழியாக, கலை மொழியாக, ஆட்சி மொழியாக, ஆளுமைத் திறன்மிக்க மொழியாக வளர்த்தெடுத்தனர்.
திராவிடத்தின்(தென்னிந்திய) ஆதி மக்களான தமிழர்களுக்குத் தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிகக அரிதாக உள்ளது. இதன் காரணம் என்னவென்றால் பிற கலாச்சாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாகத் தமிழ்நாட்டில் தமிழனின் கலாச்சாரங்களை,பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவது கூட மிக மிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழனின் கலாச்சாரப் பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டு விட்டன என்பது மாத்திரமல்லாமல் தமிழனுக்கு வரலாறு சரித்திரம் என்பது கூட இல்லாமல் அழிக்கப்பட்டு விட்டது” என்பதைக் குறிப்பிட்டுக் காட்டி, பொங்கல் விழாவைத் தமிழர்கள் கொண்டாட வேண்டும் என்று கூறினார்.
உழவே ‘தலை’ என்றுணர்ந்தவர்கள் தமிழர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை என்று அய்ந்து வகை நிலவியல் கூறுகளுக்கு ஏற்பத் தங்கள் வாழ்வியலை அமைத்துக் கொண்டவர்கள் பண்டைத்தமிழர்கள்.பயிர்த் தொழில், நெசவுத்தொழில், தச்சுத் தொழில், மட்கலத் தொழில், கொல்லுத் தொழில், உலோகத் தொழில், அணிகலத் தொழில், தோல்தொழில் என்ற கைத்தொழில்களும், கால்நடை வளர்ப்பு,வேட்டையாடுதல், மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல், முத்துக் குளித்தல் என்ற நிலஞ்சார்ந்த தொழில்களும், ஓலைத் தொழில், பொம்மை செய்தல், சாயப்பாக்கு,சுண்ணம் தயாரித்தல், கயிறு திரித்தல், நூல் தொழில் ஆகிய கைவினைத் தொழில்களும்,கள் அடுதல், சலவைத் தொழில்,கட்டடத்தொழில், விறகு வெட்டுதல், யானைப் பாகன், தேர் ஓட்டுபவன், துடியன் எனும் பிற தொழிலாளர் தொழில்களும் அரசர், அமைச்சர்,ஒற்றர், தூதுவர், காவலர்,அறங்கூறவையகத்தார், அறிவர், ஆசிரியர்,ஆவணமாக்கள், கணியன், நாழிகைக் கணக்கர், புலவர், மருத்துவர் ஆகிய அறிவுசார் தொழில்களும் பண்டை நாளில் நடைபெற்று வந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
கழனியில் இரவும் பகலும் பாடுபட்டு உழைத்துச் சேர்த்த நாள் ஒன்றுதான் உழவர்களுக்கு மகிழ்ச்சியான நாளானது. புதுநெல்லரிசி, புதுப்பானை, புதிய கரும்பு,புதிய பூசனைக்காய், புதிய இஞ்சி, புதிய மஞ்சள் கொத்து வைத்து, புத்தாடை உடுத்திக் கதிரவனை வணங்குவதும், தம்மோடு உழைப்பில் பங்கெடுத்துக் கொண்ட மாடுகளை அலங்கரித்துப் பொங்கல் சோறு ஊட்டி மகிழ்வதும் ஒரு வழி வழி மரபாகத் தொன்று தொட்டு வந்து கொண்டிருக்கிறது.
இங்கனம் தமிழர் மரபை ஒட்டி நடந்து கொண்டிருந்த விழாக்கள் எங்கனம் திரிந்தது.
இன்றளவில் தைப்பூசம், தை அமாவாசை,தை கிருத்திகை, மாசி மகம், மகா சிவராத்திரி,பங்குனி உத்திரம், ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆயுத பூசை,சரஸ்வதி பூசை, விஜயதசமி, விநாயக சதுர்த்தி, தீபாவளி, கந்த சஷ்டி, ரம்ஜான்,பக்ரீத், முகரம், கிருஸ்மஸ் என்ற பண்டிகைகளோடு இன்னும் பல்வேறு கோவில் கும்பாபிஷேகங்கள், பருவ கால வழிபாடாக அய்யப்பன் வழிபாடு….. இப்படி இன்னும் எத்தனையோ விழாக்களையும் பண்டிகைகளையும் தமிழ் நிலத்தில் வாழும் தமிழர்கள் பெரும் பணமும் நேரமும் செலவிட்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் நடத்தி வருகிறார்கள். இது அறிவுக்கும் அறிவியலுக்கும் புறம்பானது என்று இப்போதைய தமிழர்களுக்கு நினைக்க நேரமில்லை. போதாக் குறைக்கு மார்வாடிகளின் ‘ஹோலி’ பண்டிகையும் இப்பொது தமிழர்களின் முகங்களில் சாயம் பூசியிருக்கிறது. கொண்டாட்டம், களியாட்டம் என்ற பெயரில் இளைஞர்களிடையே இழிவான செயல்பாடுகள் வளர்ந்து வருகின்றன.
விழாக்களை கொண்டாடுங்கள் ஆனால் எங்கு வாழகிறோமோ அந்த இடம் சார்ந்த மரபு சார்ந்த விழாக்களுக்கு முதல் இடம் தமிழர்தம் பெருவிழாவான பொங்கலுக்கு தரளாமே?
பொங்கல்’ என்ற சொல் உயர்ச்சி,கிளர்தல், சமைத்தல், பொலிதல், மிகுதி, கள் என்ற பல பொருளைக் குறிப்பதாகும்.(பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து (சிலப்.5.69);பொங்கல் வெண்காழ் (அகம் 129.9); பொங்கல் வெண்மழை (நெடு. 19; அகம் 219). பொங்கலைத் தமிழர்களின் விழாவாக,உழவர்களுக்குரிய திருநாளாகக் கருதி அனைவரும் கொண்டாட வேண்டும் .
மேலும் பூமியும் சந்திரனும் ஒரு குறிப்பிட்ட நிலைக்கோட்டிற்கு வரும்போது ஏற்படக்கூடிய அதிர்வுகள் நேரடியாகவும் சக்தி மிகுந்ததாகவும் இருக்கும். பூரண சந்திரனின் போது, சந்திரனின் ஈர்ப்பு சக்தி மற்ற நாட்களைவிட அதிகமாக இருக்கும். அன்று அலைகள் அதிகமாக உயரும். தண்ணீர் வழிந்தோடி துள்ளிக்குதிக்கும்.
மொழி ஒரு இனத்தின் அடையாளம். ஒரு தனித்தப் பண்பாட்டின் அடையாளம். இனமானத்தின் அடையாளம். தமிழ்,தமிழருக்கு மொழி மானமாக அமைந்தது. அவ்வகையில் பெரும் தொன்மை வாய்ந்த பண்பாட்டுக்குரிய தமிழ் மக்கள், தங்களின் மொழியை உழைப்பு மொழியாக, கலை மொழியாக, ஆட்சி மொழியாக, ஆளுமைத் திறன்மிக்க மொழியாக வளர்த்தெடுத்தனர்.இங்கனம் வாழையடிவாழையாக வந்து கொண்டிருந்த நமது மரபுநடைகள், விழாக்கள் எங்கே தொலைத்தோம்?
நாகரிகம்
பொருள்(பணம்) தேடும் மிருகமாக
மாறியதின் விளைவுகளை நம் சமூகம் சந்திக்க தொடங்கியாகிவிட்டது
வீழ்வதில் உள்ள ஆர்வம்
வாழ்வதில் இல்லையே மக்களே……
என்றும்
என்றும் பேரன்புடன் முனைவர் அர க #விக்ரமகர்ணபழுவேட்டரையர்#