ஒடியன்கள்

தமிழே தாய் மொழியாக கொண்டாலும் எந்த மொழியும் பேசும் வல்லமை கொண்டவர்கள்.
சோழர்கள் காலத்தில் இவர்கள் மிக பெரிய பேறு பெற்றிருந்தனர் பழுவேட்டரையர்கள் ஆம் இவர்கள் சோழர்களின் காவலர்கள் மற்றும் சோழருடன் பெண்கொடுத்த வகையில் இருமுடிசோழ சக்கரவர்த்திகள் பராந்தகசோழர் காலத்திலேயே சோழரோடு ஒன்றாகிவிட்டனர். அவர்களுக்கு தங்களின் குலகொழுந்துகளை(சோழவாரிசுகளை) காப்பது கடமையாக்கபட்ட காரணத்தால் காலத்தால் அழியாத ஒரு காப்பு அரண் ( #பூர்வீககுடிகள்#) #ஒடியன்களை# உருவாக்கினார்கள். ஆம் பல் வேறு தொல்குடி மக்களும் அதில் இருந்தனர். அதில் பூர்வ குடி மக்களான #ஒடியன்கள்# என்று அழைக்கபடுவர்களும் அடக்கம்.

அப்படிபட்ட பூர்வகுடிகளை பற்றி சிறிது அறிந்துகொள்ளாமல் எப்படி கடந்துபோவது.
நூற்றுக்கணக்கான பிற இன குலங்களின் வரலாற்றோடு இருளர், கோத்தர், தொதுவர், ஏரவாளர், மலையாளப்பழங்குடிகள் என பல்வகைப்பட்ட பழங்குடிகளின் பூர்வீகமும், இனவரைவியல் கூறுகளும் களப்பணி ஆய்வின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. முனைவர் பகக்தவசல பாரதி தமிழகத்தில் பழங்குடிகள் நூலில் கொல்லிமலை, பச்சைமலை, சேர்வராயன், ஏலகிரி, ஜவ்வாது, சித்தேரி, கல்வராயன், பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பழங்குடிகள் குறித்தும் இருளர்கள் மலையாளிகள், முதுவர்கள், பளியர்கள், காணிக்காரர்கள், குறும்பர்கள், மலைக்குறவர்கள், காட்டு நாயக்கன் உள்ளிட்ட முப்பத்தி ஆறுக்கும் மேற்பட்ட அட்டவணை பழங்குடிகள் குறித்த விரிவான அறிமுகத்தைச் செய்கிறார். இன்னமும் வரிவடிவம் பெறாத பழங்குடிகளின் மொழி, வாய்மொழி வரலாறு, பழங்குடிகளின் தோற்றுவாய் பற்றி பேசும் தொன்ம சித்தரிப்புகள், இடப்பெயர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட வரலாறுகள், காலங்காலமாக சொல்லித் தரப்பட்ட பழமரபு கதைகள், பிறப்பு, வளர்ப்பு, திருமணம், வழிபாடு, மரணம் குறித்த சடங்குகள், ஆடல் பாடல் சார்ந்த கலைவெளிப்பாடுகள் என பழங்குடிகளின் உலகம் விரிந்து கிடக்கிறது. ஆனால் இவர்களை இன்றைய காலத்தில் மந்திரம் படித்தவர்கள் என்றும் விளங்கிகொள்கிறார்கள்.

ஏழாம் நூற்றாண்டில் கொங்கு, சாளுக்கிய மன்னர்களால் தோற்கடிக்கப்பட்ட பல்லவர்களின் ஒரு பிரிவினர் காடு மலைகளில் வாழத் தலைப்பட்டனர். உணவு சேகரிப்பு, காட்டெரிப்பு வேளாண்மை, உழுது பயிரிடுதல் போன்ற வாழ்வியல் முறைக்கு முள்ளாகிய அம்மை பயன்படுத்திய காரணத்தால் முள்ளு குறும்பர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். ஆங்கிலேயரால் தோடர்கள் என அழைக்கப்பட்ட தொதவர்கள், கோத்தர்கள், என பழங்குடியினர் பற்றிய விவரிப்புகள் நீண்டு செல்கின்றன. இதில் வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்திலிருந்தே இனக்கூறுகளை தனித்துவமாக கொண்டிருக்கும் மக்களை தொல்குடிகள் என்றும் நீண்ட நெடுங்காலம் தம் நிலப்பகுதியில் வாழும் மண்ணின் மைந்தர்களை முதுகுடியினர் என்றும் பலநூற்றாண்டுகளுக்கு முன் சமவெளிப்பகுதியிலிருந்து மலைப்பகுதிக்கு குடியேறியவர்களை பழங்குடியினர் என்று வரையறை செய்வதையும் கண்டு கொள்ளலாம்.
சோழர்கள் இப்படிபட்ட பூர்வீக குடிகளை தங்களின் அன்பால் அடக்கி தங்கள்வசமே வைத்துகொண்டார்கள்.
பழங்குடிகளின் தோற்றம் குறித்த தொன்மங்களும் இடப்பெயர்ச்சிக்கான காரணங்களும் ஒரு வரலாற்று ரீதியான மறுவாசிப்பின் வழி உணர்த்தப்படுகிறது. இதன் பொதுவான கருத்தியலாக வெளிப்படுவது நிலப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த பழங்குடி அரசனும் மக்களும், சேர, பாண்டிய அரசர்களால் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள் சோழகுடிகளுக்கு உதவிய காரணத்தால், பழங்குடி அரசுகளை அரசியல் அதிகாரத்தின்வழி கைப்பற்றியதன் தொடர்ச்சியாக துரத்தப்பட்டபோது, மலைகளுக்கும், கானகங்களுக்கும் தப்பியோடி வாழ்ந்த தமிழ் மக்கள் இந்த பழங்குடிகள் என்பதாக இதனை கண்டடைய முடிகிறது. இவர்களை முதுவர்கள் என அழைத்தனர்
முதுவர்களின் நாயக்க மன்னர்கள் போடிநாயக்கனூரில் பாண்டியரைப் போரிட்டு தோற்கடித்தபோது ஒரு பிரிவினர் தம் குழந்தைகளை முதுகில் சுமந்து ஆனைமலை, ஏலமலை, கேரளமலை இடங்களுக்கு சென்று தங்கினர். குழந்தைகளை முதுகில் சுமந்ததால் முதுவர் என்றழைக்கப்பட்டனர். பளியர்கள் எனப்பட்டவர்கள் பாண்டிய மன்னனின் படைகளால் சிதறடிக்கப்பட்டபோது ஒரு பிரிவினர் பழனி மலைகளில் வந்து மறைந்து வாழ தலைப்பட்டனர்.
அங்கனம் மறைத்து மறைந்து வாழ்த்துக்கள் தழைபட்டு இதோ தமிழ் பூர்வீக குடிமக்கள் இடம்பெயர்ந்தனர்
இன அடிப்படையில் அந்தோமான் நிகோபர் தீவுகளில் வசிக்கிற நீக்ரோவினர், மியான்மர் தென் கிழக்கு ஆசியத் தீவுகளிலும் வசிக்கும் முண்டா இனத்தினர், அசாம், அருணாசலபிரதேசம், மிசோ, மணிப்பூர், அசாம், நாகலாந்து, மேகாலாயா பகுதிகளில் வசிக்கும் சீனா, திபெத்திய தன்மைகள் கொண்ட கோந்த் மங்கோலியர், வட, நடு, தெற்கு இந்திய திராவிடமொழிகளைப் பேகம் மாலர், ஓரள இருளர் பேசும் கோததர், தொதவர், காடர், காணிகாரர், ஊராளி திராவிட பழங்குடியினர் என்பதாக பூகோளவியல், இன மொழிக்குடும்ப அடிப்படையில் வகைப்பாட்டை மேற்கொள்ளலாம். இந்த வகையில் பழங்குடிகள் கலப்பின மொழியை மலை மொழியாக பேசுகிறார்கள். கேரள மாநிலம் பாலக்காட்டு மலையோரக் காடுகளில் வாழும் இரவாளர்கள், தமிழ் மழையாளமொழிக்கலப்பான சரிவிநாளு என்ற மொழியை பேசுவர். குறவர்கள் இந்தோ ஆரிய குடும்ப வகையான வாக்ரிபோலி மொழியை பேசுகின்றனர். ஆம் சோழர்கள் இவர்களை கடல் கடந்து கொண்டு சேர்த்த பெருமை உண்டு. இங்கனம் தேடி தேடி காத்த மக்களை விட்டு எங்கே போனார்கள்….

ஆராய்ச்சியில்
என்றும்
பேரன்புடன்

முனைவர் அர க #விக்ரமகர்ணபழுவேட்டரையர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *