பல்லவர்கள் தமிழர்களா? உடனே பதைக்கவேண்டாம் கோபம் தவிர்த்து சான்றுகளை ஆராய்வோம் வாருங்கள்…
பல்லவ அரசர்கள் தமிழர்களா என்ற கேள்வி என் மனதில் நெடு நாட்கள் இருந்துள்ளது. அவர்கள் தமிழ் பேசவில்லை.சமஸ்கிருதம் பேசியதாக அறிவேன். இவர்கள் தமிழர்களா? இவர்கள் எங்கிருந்து, எப்படி வந்தவர்கள்? இவர்கள் எவ்வாறு தமிழகத்தின் ஒரு பகுதியை பல்லவ நாடு என்று அழைத்து ஆட்சியும் புரிந்தனர்?
அதோடு பலம் பொருந்திய சோழர்களையும் பாண்டியர்களையும் வென்று முழு தமிழகத்தையும் ஆண்டுள்ளனரே?தமிழ் மன்னர்கள் என்று நாம் கூறும்போது மூவேந்தர்கள் என்று சோழ, சேர, பாண்டிய மன்னர்களைத்தான் கூறுகிறோம். பல்லவர்களை நாம் கூறுவதில்லை. ஆனால் அவர்கள் ஆண்ட பகுதியும் தமிழகத்தைச் சேர்ந்ததுதான். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,ஆற்காடு, வேலூர், மகாபலிபுரம், சென்னை ஆகிய பகுதிகளை நாம் தொண்டை மண்டலம் என்கிறோம். அதே வேளையில் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர்களையும் தொண்டைமான்கள் என்றும் அழைக்கிறோம். இது எப்படி சாத்தியமாகும்? நரசிம்ம பல்லவர் அதுபோன்ற படைகளுடன் வாதாபி வரைச் சென்று அதைக் கைப்பற்றி அழித்து தீக்கு இரையாக்கிவிட்டுத் திரும்பியதாக நாம் படித்துள்ளோம். இந்த வாதாபி என்பது இன்றைய மகாராஷ்டிரத் தலைநகரான பம்பாய் (மும்பாய்) என்றால் அது பலருக்கு வியப்பாக இருக்கும். ஆம். அதுதான் உண்மை! அப்படியெனில் எத்தனை தூரம் அவர்கள் சென்றிருக்கவேண்டும் என்று நினைத்தால் அது இன்னும் வியப்பையே தரும். நிச்சயமாக அவர்கள் ஆந்திரா, கர்நாடக வழியாகத்தான் மகாராஷ்ட்டிரா சென்றிருக்கவேண்டும். அப்படியெனில் பல்லவர்களின் படைகள் எத்தகைய வீரமமும் வலிமையையும் கொண்டவை என்பதை நம்மால் எண்ணிப்பார்க்க முடிகிறது.
அனால் பல்லவர்கள் தமிழர்கள் இல்லை என்ற உண்மையை அறியும்போது மனதில் சிறு உறுத்தல் உண்டாகிறது.சோழர்களும் பாண்டியர்களும் போர்த் திறனிலும், சிற்பம் மற்றும் கட்டிடக்கலையிலும் சிறந்தது விளங்கியுள்ளனர் என்பதை அவர்கள் கட்டியுள்ள தஞ்சை பெரிய கோவிலும், கங்கைகொண்ட சோழபுரம் கோவிலும், மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் சான்று பகர்கின்றன. ஆனால் பல்லவர்களிடம் வேறு விதமான கட்டிடக் கலை இருந்துள்ளது. அவர்கள் குகைக்கோவில்கள் அமைப்பதிலும், பாறைகளைக் குடைந்து சிற்பங்கள் அமைப்பதிலும் சிறந்து விளங்கியுள்ளனர். இவற்றுக்கு மகாபலிபுரத்து கடற்கரைக் கோவிலும் அங்குள்ள ஐந்து குகைக்கோவில்களும், இதர பிரமிக்கவைக்கும் கருங்கல் பாறைகளில் குடைந்த கலை வடிவங்களும் அழியாத சான்றுகள். இதுபோன்றே புதுக்கோட்டை அருகேயுள்ள சித்தன்னவாசலில் அமைந்துள்ள சில குகை ஓவியங்களும் சிற்பங்களும் புதுக்கோட்டை தொண்டைமான்களை பல்லவர்கள் என்று அடையாளம் காட்டுகின்றன.பல்லவர்கள் எப்படி புதுக்கோட்டைக்கு வந்திருப்பார்கள் .அவர்கள்சோழர்களையும்பாண்டியர்களையும் வென்று முழு
தமிழக வரலாற்றைப் பார்த்தால்முற்காலப் பல்லவர்கள் சோழ மன்னர்களிடமிருந்த தொண்டை நாட்டைக் கைப்பற்றி கி.பி. 256 ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தைத் தலைநகராக அமைத்துக்கொண்டு ஆண்டனர். இவர்களின் இந்த ஆட்சி கி.பி. 340 வரை நீடித்துள்ளது.அதன்பின்பு களப்பிரர் என்னும் கள்ளர் இனகுழுவை சேர்ந்த தமிழரின் பல குழுக்களாக பிரிந்து தமிழகத்தைக் கைப்பற்றி கி.பி. 250 முதல் கி.பி. 550 வரை ஆண்டுவந்தனர் அவர்களே வரலாற்றில் சான்றுகள் இட தவறியதால் களப்பிறார்கள் என்று அழைக்க படுகிறார்கள். அவர்களை 6 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிம்மவிஷ்ணு பல்லவனும், பாண்டியன் கடுங்கோனும் ஒன்று சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ விரட்டி அடித்தனர். கி.பி. 6 -ஆம் நூற்றாண்டிலிருந்து கி..பி. 9 – ஆம் நூற்றாண்டுவரை பிற்காலப் பல்லவர்கள் தொண்டை நாட்டுடன் முழு தமிழகத்தையும் மீண்டும் ஆண்டார்கள்.அப்போது அவர்கள் மறுபடியும் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டிருந்தனர். மகேந்திர பல்லவரும், நரசிம்ம பல்லவரரும் கி.பி. 7 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். உண்மையில் பல்லவர்கள் பேசிய மொழி பிராகிறிட் ( Prakrit ) பிறாகிருதம் (பாரசீகம்) என்பது. இது அன்றைய பாரசீக மொழியாகும்.பாரசீகம் என்பது இன்றைய ஈரான். அவர்கள் வடக்கிலிருந்து வந்ததால் சமஸ்கிருதமும் பேசினர். அவர்கள் காஞ்சியை ஆண்டகாலத்தில் அரசு ஆணைகளை தமிழில் எழுதவில்லை. பிராகிறிட் (ப்ர்சி)மொழியிலும் சமஸ்கிருதத்திலும் எழுத்தினர். அவர்கள் காலத்தில் தமிழ்ப் பள்ளிகள் இருந்திருக்க நியாயமில்லை. அவர்கள் வடமொழியை ஆதரித்தார்கள். அதனால் சமஸ்கிருதப் பள்ளிகள் இருந்திருக்கலாம். அவர்கள் அணியும் இடுப்பு உடையும பாரசீகர் பாணியில் இருந்துள்ளது. பல்லவ மன்னர்களின் கிரீடங்கள் உருண்டையாக உயரமாக பாரசீக மன்னர்களின் கிரீடத்தை ஒத்துள்ளது. அவர்களின் உடல் அமைப்பு உயரமாகவும், முகம்கூட நீளமாகவும் அமைந்துள்ளது.பல்லவர்கள் ஆந்திர அரசர்களின் அமைச்சர்களாக இருந்துள்ளனர். இதை கல்வெட்டுகள் நிரூபிக்கின்றன. இதுபோன்ற இன்னும் ஏராளமான சான்றுகளை வைத்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பார்த்தத்தில் பல்லவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாரசீகத்திலிருந்து ( ஈரான் ) தரை வழியாக இந்தியாவுக்குள் பஞ்சாப் வழியாக புகுந்துள்ளனர். வடநாட்டின் சில பகுதிகளில் இருந்துவிட்டு மகாராஷ்டிரம், கன்னடம்,ஆந்திரம் வழியாக வட தமிழகம் வந்து காஞ்சிபுரத்தில் குடியேறியதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு ஆராய்ச்சிப்பூர்வமாக நிறைய சான்றுகள் உள்ளன.பல்லவர் காலத்தில் முன்பு களப்பிரர் ஆட்சியில் முடங்கிக்கிடந்த சைவமும் வைணவமும் புத்துயிர் பெற்றன. அது சமண பெளத்த சமயங்களை வீழ்ச்சியடையச் செய்தன. மகேந்திர பல்லவர் சமணராக இருந்தவர். திருநாவுக்கரசர் அவரை சைவராக்கினார். சைவ நாயன்மார்கள் இக் காலத்தில் சைவ சமயத்தைப் பரப்பினர். கி.பி. 7 – ஆம் நூற்றாண்டில்தான் விநாயக(பிள்ளையார்) வழிபாடு தமிழகத்தில் புகுந்தது. சங்க நூல்களில் விநாயக வழிபாடே இல்லை. ஆம் தமிழர்கள் இப்படி ஒரு வழிபாட்டை அறிந்திருக்க வில்லை அங்ஙனம் வழிமுறைகளில் இல்லை. சங்ககாலத்தில் 8 -ஆம் நூற்றாண்டில் சமணத் துறவிகளால் நாலடியர் பாக்கள் தோன்றியிருக்கவேண்டும். புதுமனார் என்பவர் சிதறிக்கிடந்த வெண்பாக்களைத் திரட்டி நாலடியார் என்னும் பெயரில் தொகுத்து வைத்தார்.ஆதலால் வரலாற்றுப்பூர்வமாகவும், ஆராய்ச்சிகளின் வழியாகவும் காணுங்கால் பல்லவர்கள் உண்மையில் ஈரானியர்கள் என்பது நிச்சயமாகிறது. பல்லவ அரசு பிற்காலத்தில் சோழர்களால் வீழ்த்தப்பட்டபின்பு அவர்களில் பெரும்பாலும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மதுரை தஞ்சை பகுதி வேளாளர்களும் , தஞ்சைப் பகுதி சோழ வேளாளர்களும், வட ஆற்காட்டு ஷத்தியர்களும் வைசியர்களும், தமிழ் பேசும் வேளாளர்களும் ஆந்திராவின் ரெட்டிகளும் புதுக்கோட்டை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பல்லவர்கள். இவர்கள் காலப்போக்கில் தமிழ் கற்று, தமிழ்க் கலாச்சாரத்தோடு கலந்து தமிழர்களாகவே வாழ்கின்றனர். இது ஒரு வரலாற்று ஆதாரங்களின் அடிபடையில் கருத்தியில் ஆராய்ச்சியே ஆகவே நாம் பல்லவர்களுக்கான ஆராய்ச்சியை தொடர்வோம்….
என்றும் ,
பேரன்புடன் முனைவர் அர.க. #விக்கிரமகர்ணபழுவேட்டரையர்.